தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வாக்களிப்பீர்.. கி. வீரமணி அறிக்கை

K Veeramani: “தி.மு.க ஆட்சியை மீண்டும் மலர வாக்களிப்பீர்“ என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Published on: February 17, 2026 at 5:06 pm

சென்னை, பிப்.17, 2026: “தி.மு.க. ஆட்சியை மீண்டும் மலர வாக்களிப்பீர்” என தமிழக வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. ஆட்சியில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., பதவிகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் உயர்ஜாதியினரே அனுபவிக்கின்றனர்.

சட்டப்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் – மிகவும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமூக அநீதிக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் கண்காணிப்புக் குழு அமைத்துச் செயல்பட்டுவரும் தி.மு.க. ஆட்சியே மீண்டும் மலர வாக்களிப்பீர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளும் பி.ஜே.பி.யுடன் இணைந்து, ‘கூட்டணி’ என்று அமைத்து, தேர்தல் களத்தில் வருவதற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? உயர்ஜாதியினர் மட்டுமே வாக்களித்து வந்த ஆட்சியா, ஒன்றிய ஆட்சி? இல்லையே! ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி, பொய்ச் சிரிப்புக் காட்டியும், அடக்குமுறை, அச்சுறுத்தல்களாலும் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்படிக் கொடுமை செய்வதா? என விமர்சித்துள்ள கி. வீரமணி, “ஏற்கெனவே பல படிக்கட்டுகளில் கல்வி, உத்தியோகத்தில் உயர்ந்துள்ள பார்ப்பனர்கள், முன்னேறிய ஜாதியினருக்கு ‘ஏழைகள்’ என்று ஒரு முத்திரை குத்தி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com