பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

CPM Leader Shanmugam: கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்ததால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Published on: March 17, 2026 at 4:16 pm

சென்னை, மார்ச் 17 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்ய தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளை விரும்புகிறது. ஆனால் கூடுதல் தொகுதிகள் கொடுக்க திமுக தரப்பில் உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திமுகவுடன் நடத்திய 3ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம்; கூடுதல் தொகுதிகள் வேண்டும் என கேட்டோம். கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து எங்களிடம் கூறினார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டோம்

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது; கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களுடைய மாநில குழு கூடி முடிவெடுக்கும். புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com