24 மணி நேர சிகிச்சை.. தொடர் கண்காணிப்பு.. எப்படி இருக்கிறார் நல்லக்கண்ணு?

Nallakannu Health Condition: முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Published on: February 24, 2026 at 7:27 pm

சென்னை, பிப்.24, 2026: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லக்கண்ணு (வயது 101) உடல் நலம் குன்றிய நிலையில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை அவரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில், நல்லக்கண்ணுவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவின.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், “நல்லக்கண்ணு இயற்கையுடன் போராடி வருகிறார்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்முறையாக அறிக்கை வெளியீட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை வெளியீடு

அந்த மருத்துவ அறிக்கையில், “அவரது (நல்லக்கண்ணு) உடல்நிலையை சீராக்க அதிதீவிர சிகிச்சைகளின் மூலம் 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com