நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

K N Nehru: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published on: February 20, 2026 at 3:54 pm

சென்னை, பிப்.20, 2026: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை, அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்திருந்தார். இதற்கிடையில், ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்.. தேர்தல் கூட்டணி ரெடி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com