Nallakannu Health Condition: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணு இயற்கையுடன் போராடி வருகிறார் என தகவல் வெளியாகி வருகிறது.
Nallakannu Health Condition: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணு இயற்கையுடன் போராடி வருகிறார் என தகவல் வெளியாகி வருகிறது.

Published on: February 24, 2026 at 12:38 pm
சென்னை பிப்ரவரி 24, 2026; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்ல கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது; அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவ சிகிச்சைகள் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது நல்ல கண்ணுவின் உடல்நிலை, கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் இயற்கை உடன் போராடி வருகிறார் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவை சந்தித்தபின் வீரபாண்டியன் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க ஸ்டாலின், நல்ல கண்ணுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் நேரடியாக சென்று கேட்டறிந்தார். இதற்கிடையில் நல்ல கண்ணுவின் உடல்நிலை குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், ” தன் வாழ்நாள் முழுவதும் போராட்ட களத்தில் கழித்த நல்லகண்ணு தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க; தி.மு.க, மக்கள் நீதி மய்யம் தொகுதி பங்கீடு பேச்சு மாற்றம்.. முழு விவரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com