Tamil Nadu | அமெரிக்காவிலிருந்து சோழர் கால கிருஷ்ணர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.2 கோடி ரூபாய் ஆகும்.
Tamil Nadu | அமெரிக்காவிலிருந்து சோழர் கால கிருஷ்ணர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.2 கோடி ரூபாய் ஆகும்.
Published on: September 7, 2024 at 11:37 am
Updated on: September 7, 2024 at 11:48 am
Tamil Nadu | 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபுரால் கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒன்று அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலை தற்போது மீட்கப்பட்டு தமிழ்நாடு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்தச் சிலையானது சோழர் கால சிலையாக கருதப்படுகிறது.
இதன் மதிப்பு ரூபாய் 5.2 கோடி ஆகும். பல்வேறு கோவில்களில் உள்ள சிலைகள் திருடப்பட்டு வெளிநாட்டில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டு காட்சி பொருளாக பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஆன்லைனில் உள்ளன.
இந்தப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு கோவில்களில் எந்தெந்த சிலைகள் காணாமல் போகின்ற என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலையானது பாம்பின் மீது நடனம் ஆடுவது போல் உள்ளது. இதனை நடனமாடும் கிருஷ்ணர் என்றும் கலிய கல்கி என்றும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com