Southern Railway | சென்னை கவரைப்பேட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. மேலும், 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம்
- சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16112 புதுச்சேரி – திருப்பதி ரத்து செய்யப்பட்டது.
- மாலை 4:35 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்ட ரயில் எண் 16203 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை பிற்பகல் 2:25 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16053 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- சனிக்கிழமை காலை 10:10 மணிக்கு புறப்பட்ட ரயில் எண் 16054 கொண்ட திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- மாலை 6:05 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16058 திருப்பதி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16402 கடப்பா – அரக்கோணம் ரத்து செய்யப்பட்டது.
- கூடுதலாக, விஜயவாடா-சென்ட்ரல் வழித்தடத்தில் பினாகினி எக்ஸ்பிரஸ் இரு திசைகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேலும், சூலூர்பேட்டை-நெல்லூர் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தாம்பரம்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில் அறிவிப்பு: புறப்படும் நேரம், இடம் செக் பண்ணுங்க!
- கடக ராசிக்கு தேடிவரும் வாய்ப்பு.. 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 19, 2026) பலன்கள்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 19, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
- எல்லாம் வல்ல இறைவன் அருளால்.. த.வெ.க தலைமையில் ஆட்சி.. இப்தார் நோன்பு விழாவில் விஜய்!
Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.
- புதுச்சேரியின் ஆறு மாத அரசியல் எழுச்சி.. என் டி ஏ கூட்டணியின் புதிய அத்தியாயம்.. சாதித்த எல்.ஜே.கே!
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
- சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது!
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.
- விமானத்தில், ‘இருக்கை தனி கட்டணம்’ வசூலிக்கக் கூடாது.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்