Chennai: அடுத்த 45 நாள்களுக்கு சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Chennai: அடுத்த 45 நாள்களுக்கு சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published on: February 18, 2026 at 12:23 pm
Updated on: February 18, 2026 at 5:04 pm
சென்னை, பிப்.18, 2026: சென்னை மின்சார ரயில் சேவையில் அடுத்த 45 நாள்களுக்கு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “எழும்பூர் ரயில் நிலைய 10,11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு 5,6வது நடைமேடைகளில் இருந்து புறப்படும் கேளுக்கு 5.8வது நடையே சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நடைமேடை 6-ல் இருந்து இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் நடைமேடை 5-ல் இருந்து இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, “சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணைப்படி இயங்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
இந்த மாற்றங்கள், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை எளிதாக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயற்கை வேளாண் மையம்.. விவசாயிகளுக்கு நெல் வகைகள்.. விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com