Puducherry : புதுச்சேரி காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்ட ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.
Puducherry : புதுச்சேரி காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்ட ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

Published on: March 15, 2026 at 5:13 pm
Updated on: March 15, 2026 at 5:25 pm
புதுச்சேரி மார்ச் 15, 2026; புதுச்சேரியைச் சேர்ந்த 28 வயது சர்மிளா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஷர்மிளா உப்பளத்தில் தனது தந்தை முனுசாமி உடன் வசித்து வந்தார்; இவருக்கு 35 வயதான இந்திரா நகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் நட்புறவாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஜோசப் திருமணம் ஆகாதவர், என நம்பி ஷர்மிளா அவருடன் நட்பை தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் ஜோசப் திருமணமானவர் என்றும் அவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்றும் ஷர்மிளாவுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜோசப் உடனான நட்பை ஷர்மிளா துண்டித்துள்ளார்.
இதையும் படிங்க; வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு? 2 குழந்தைகள் பலி.. சென்னையில் பரிதாபம்!
இதனால் ஆத்திரமுற்ற ஜோசப் ஷர்மிளாவை பின் தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகள் அளித்து வந்துள்ளார். இந்த தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, ஜோசப் மீது ஒடியன் சாலை காவல் நிலையத்தில் ஷர்மிளா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஜோசப் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜோசப் வெள்ளிக்கிழமை இரவு ஒடியன் சாலை காவல் நிலையம் அருகே ஷர்மிளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மீது தீ வைத்துள்ளார்; இந்த தீ ஜோசப் மீதும் பரவியது. இந்த நிலையில், ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பாதையில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஷர்மிளா உயிரிழந்தார். ஜோசப்புக்கு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க; வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு? 2 குழந்தைகள் பலி.. சென்னையில் பரிதாபம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com