அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்கும் பாஜக? பரபரப்பு தகவல்கள்!

Assembly Election 2026: அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, 30 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: March 19, 2026 at 7:57 pm

புதுடெல்லி மார்ச் 19 2026; தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னதாக அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 30 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில் ஒரு சில சிறிய கட்சிகள் பாரதிய ஜனதா சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது; இதற்கு அதிமுக தரப்பில், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என அதிமுக கருதுகிறது.

இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது; அதாவது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு எட்டு தொகுதிகளும் மற்ற சிறிய கட்சிகளுக்கு 12 தொகுதிகளையும் பாரதிய ஜனதா கேட்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கிட்டத்தட்ட 50 தொகுதிகளை கேட்கிறது. இது தொடர்பாக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய பின் இந்த சிக்கல்கள் தீரும்; அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது; இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும், ஆட்சியைத் தக்க வைக்க திமுகவும் தீவிரம் காட்டுகின்றன; இதற்கிடையில் நாம் தமிழர் தனித்து களம் காண்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய வரவான, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தனித்து களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தி.மு.க. ஒன்றும் பா.ஜ.க அல்ல.. முஷ்டி முறுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com