புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்.. 11பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

Autorickshaw Race in chennai: சென்னை அருகே ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Published on: February 3, 2026 at 12:19 pm

சென்னை, பிப்.3, 2026: சென்னை அருகே ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 11 பேரை ஆவடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த ஆட்டோ ரேஸ் சம்பவம் புழல்- தாம்பரம் பை-பாஸ் சாலையில் போரூர் டோல் கேட் அருகில் நடந்துள்ளது.

இந்த ஆட்டோ ரேஸிங், ஆபத்தான ஓவர்டேக், காரணமாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையில், மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின்தொடர்ந்தவர்கள் மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆட்டோ ரிக்ஷா மற்றும் 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்ற காவலில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்.. மூத்த கம்யூனிஸ்ட் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com