Anbumani Ramadoss: பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: June 25, 2025 at 5:51 pm
Updated on: June 25, 2025 at 8:17 pm
சென்னை, ஜூன் 25 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உள்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் இராமர் என்ற காவலரால் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீதி கேட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “காவல்துறை பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும்; அனைத்துக் காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் அமர்த்தப்பட்டு புகார் கொடுக்க வரும் அனைவரும் கனிவாக நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வசன மழை பொழிந்து வருகிறார்.
ஆனால், குற்றங்களைச் செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்நிலையங்களில் மரியாதைக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது. திமுக ஆட்சியின் காவல் அறம் இது தானா? எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, “ ‘தமிழகக் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது’ என்று 1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்டப் பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று அவரது புதல்வர் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் முழுமையாகவே அழுகி விட்டது என்பதைத் தான் கன்னம்மாசத்திரம் காவல்நிலையத் தாக்குதல் காட்டுகிறது” என சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, “பாலியல் தொல்லையாலும், அதன் பின் காவல்நிலையத்தில் காவலரின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட காவலர் இராமர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு; தி.மு.க மீது டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com