Anbumani Ramadoss: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: October 29, 2025 at 3:01 pm
சென்னை, அக்.29, 2025: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை கூலிப்படையை சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் காணப்படுகின்றன.
அண்மையில் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியதுடன் வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது எனக் கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
யாரை காப்பாற்ற முயற்சி?
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ், ‘ஆம்ஸ்ட்ராங் படுெகொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தி.மு.க மீண்டும் மேல்முறையீடு செய்கிறது. ஆம்ஸ்ட்ராங் வழக்கை பொறுத்தமட்டில் தமிழக காவல்துறையின் விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை விசாரிப்பது நியாயமல்ல.
இந்த வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு தி.மு.க அரசு முட்டுக்கட்டைப் போடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தி.மு.க அரசின் செயலின்மையை கண்டித்த சி.ஏ.ஜி.. மக்களும் விரைவில் பாடம் புகட்டுவர்.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com