Anbumani Ramadoss: திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு ஒன்றை போதும் என விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு ஒன்றை போதும் என விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: January 19, 2026 at 4:32 pm
சென்னை ஜனவரி 19, 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் இன்னும் விலகாத நிலையில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அதே மாவட்டத்தில் மேலும் இரு இடங்களில் கஞ்சா போதைக் கும்பல் அடுத்தடுத்து வெறியாட்டங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
கஞ்சா போதையில் நடைபெறும் வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “கஞ்சா போதையில் இவ்வளவு குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து வாயைக் கூட திறக்க மறுக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என விமர்சித்துள்ள அன்புமணி, “திமுக ஆட்சியில் கல்வித்துறை சீரழிவு, மருத்துவத்துறை சீரழிவு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமை, 87% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதியை பலி கொடுத்தது, வரலாறு காணாத வகையில் மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியது என திமுக ஆட்சியை அகற்றுவதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; உழவர்களின் முதல் எதிரியே திமுக தான்.. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com