Anbumani Ramadoss: மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை என விமர்சித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை என விமர்சித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Published on: September 19, 2025 at 10:01 am
சென்னை, செப்.19, 2025: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை விடுத்திருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட 5 நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட 8634 அறிவிப்புகளில் இதுவரை பாதி மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.மீதமுள்ளவற்றில் பெரும்பான்மையான அறிவிப்புகளுக்கு அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று கைவிடப்பட்டு விட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. சாத்தியமற்ற திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று அடையாளம் காணப்பட்டு கைவிடப்பட்டு விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் எந்தவொரு திட்டமும் போகிற போக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் அதற்காக சம்பந்தப்பட்ட துறையின் கள அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை பல நிலைகளில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தான் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்பட்ட திட்டங்கள் சாத்தியமற்றவை என்று இப்போது தான் தெரியவந்ததாகக் கூறுவது ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திமுகவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இவையெல்லாம் அதிர்ச்சி அளிக்காது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளிப்பதும், பின்னர் அவை சாத்தியமற்றவை என்று கூறி நழுவுவதும் திமுகவின் இயல்பு தான்” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, “ஆசை காட்டி மோசம் செய்வது தான் திமுகவின் கொள்கை. அதை மீண்டும் ஒரு முறை திமுக நிரூபித்திருக்கிறது. திமுகவின் மோசடிக் கொள்கையை இப்போது நன்றாக புரிந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். அடுத்த 6 மாதங்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com