Anbumani questions DMK : மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுப்பதா என தி.மு.க. அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Anbumani questions DMK : மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுப்பதா என தி.மு.க. அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Published on: August 12, 2025 at 11:55 am
சென்னை, ஆக.12 2025: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வண்டலூர் & மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. குறைந்தபட்சமாக மகிழுந்துகளுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.895 வரை சுங்க்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சராசரியாக ஓரு வாகனத்திற்கு ரூ.300 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.3500 என்ற அளவைத் தாண்டி விடும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும்? என்பதைப் புரிந்து கொண்டாலே, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும். எனவே, வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்; இந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்.. பா.ம.க. மகளிர் மாநாடு.. மருத்துவர் ராமதாஸ் அழைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com