Dr Ramadoss: “என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Dr Ramadoss: “என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: December 29, 2025 at 6:43 pm
சென்னை, டிச.29, 2025: பாட்டாளி மக்கள் கட்சி சமீபகாலமாக உள்கட்சி பிரச்னை பெரிதாகியுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் ஓர் அணியும், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று (திங்கள்கிழமை) பா.ம.க (ராமதாஸ்) கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவுக்கு மருத்துவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பொதுக்குழுவில் பா.ம.க தலைவராக நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ராமதாஸ், “என்னையும் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியையும் ஒரு கும்பல் துரத்துகிறது. அவமதிக்கிறது. 95 சதவீதம் பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணி பக்கம் வெறும் 5 சதவீதம் மக்கள் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் அன்புமணிக்கு சரியான பதிலை கொடுக்கும்” என்றார்.
முன்னதாக, “என் மார்பில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி” என விமர்சித்த ராமதாஸ், “சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகின்றனர்” எனவும் கூறினார்.
இன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்கலங்கி காணப்பட்டார். இது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க : திமுக கூட்டணியில் விரிசல்? நயினார் பேச்சுக்கு கனிமொழி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com