பொம்மை ஆட்சியாளர்கள்.. அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன குழப்பம்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில் குழப்பம் எனக் கூறியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “அரைகுறை புரிதலால் தேர்வர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் தி.மு.க அரசு” எனவும் விமர்சித்துள்ளார்.

Published on: March 15, 2026 at 12:59 pm

சென்னை மார்ச் 15, 2026; “அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில் குழப்பம்” என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும்,”தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை தகுதியில்லை என்று கூறி வேலை வழங்க மறுத்து திமுக அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது.

வாரியத்தால் அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்க வேண்டிய தருணத்தில் தகுதி இல்லை என்று கூறி அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பது கண்டிக்கத்தக்கது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சமூகநீதி படுகொலை செய்யப்படுகிறது. பணி நியமனங்களில் குளறுபடிகள் நடக்கின்றன. காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் இரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்றன; டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பே இரத்து செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் ஆட்சியாளர்கள் பொம்மைகளாக இருப்பதும், அதிகாரிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுக்க அனுமதிக்கப்படுவதும் தான். இந்த நிலையை மாற்றி பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட 6 பேருக்கும் உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களிலும் பகுதி நேரமாக படித்துப் பெறப்பட்ட முனைவர் பட்டத்தை வழக்கமான முனைவர் பட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க; கோவையில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை.. சக காவலர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com