சென்னையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. முடங்கிய திமுக அரசு.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: சென்னையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 12, 2026 at 2:09 pm

Updated on: March 12, 2026 at 2:15 pm

சென்னை மார்ச் 12, 2026; சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.

திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்!

அதைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று திரும்பிய மாணவியை அதே கும்பல் மீண்டும் மகிழுந்தில் கடத்திச் சென்று நடந்த கொடுமை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. மாணவி கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதால் மேலும் பல தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் நிலைநிலவுகிறது என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, காட்டாட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஆனால், இதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கடைசி நேரக் கொள்ளையிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கையாலாகாத அரசு. மக்களைக் காப்பதற்கு துப்பற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்கதூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்! TTV Dinakaran

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு! Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com