D Jayakumar: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என காட்டமாக பதில் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்
D Jayakumar: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என காட்டமாக பதில் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்
Published on: March 13, 2025 at 5:29 pm
சென்னை மார்ச் 13, 2025: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியது அதிமுக தான் என கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், ” கரை வேட்டியை நாங்கள் மாற்றாமல் உள்ளோம்” என்றார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்கள் இப்போதே நடைபெற தொடங்கிவிட்டன. இந்த பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பிலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுக் கூட்டங்களில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது மு க ஸ்டாலினும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இது தொடர்பாக இன்று ( மார்ச் 13 2025) அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பதில் அளித்தார்.
ரகுபதியை அடையாளம் காட்டிய அதிமுக
அப்போது பேசிய அவர், ” முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சவாலுக்கு மு க ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்; அமைச்சர் ரகுபதி ஏன் பதிலளிக்க வேண்டும்?
அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே நாங்கள் தான். அதிமுக தான் அவரை அடையாளம் காட்டியது. கரை வேட்டியை நாங்கள் மாற்றாமல் உள்ளோம்” என்றார்.
திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், ” தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்தது திமுக; திமுக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் திமுக ஒருபோதும் செய்யவில்லை. மாறாக அடுத்தவர்கள் மீது பழியை போடுகிறது” என்றார்.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியவில்லை.. எல் முருகன் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com