சென்னை, மார்ச் 27;சென்னையை தமிழக வெற்றிக்கழகம் குறி வைக்கிறது; கடந்த காலங்களில் அதிமுக திமுக என சென்னை, இரு திராவிட கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்தது. அதிலும் திமுக சென்னைக்கு அதி முக்கியத்துவம் இதுவரை வழங்கி வருகிறது. இந்த நிலையில் புதிதாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிமுகமாக உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் சென்னையை குறிவைத்து களம் காண்கிறது.
அந்தக் கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் களம் காண்கிறார்; இது தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சென்னையை குறிவைத்து முக்கியமான வேட்பாளர்களை களம் இறக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுளளது.
இந்த தகவலை அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றி கழகம் சென்னையில் அதிகப்படியான தொகுதிகளில் வென்று காட்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, “சென்னையை பொருத்தமட்டில் தமிழக வெற்றிக்கலகம் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் வெற்றி அடையும்; தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். அன்றைய தினம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள்”என்றார்.
இதையும் படிங்க; மாம்பழ சின்னம்.. தேர்தல் ஆணையம் பாரபட்சம்.. ராமதாஸ் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்