ஈரோட்டில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் கைது.. பரபரப்பு தகவல்கள்..!

7 Bangladeshis arrested in Erode: ஈரோட்டில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவில் தங்கி இருந்துள்ளனர்.

Published on: April 24, 2025 at 6:02 pm

ஈரோடு, ஏப். 24 2025; கோயம்புத்தூரை அடுத்த ஈரோட்டில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி தமிழ்நாட்டில் தங்கி இருந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஈரோட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றே தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு நபர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் குதிரை ஓட்டி உட்பட சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை மூன்று பேரின் படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் வீரமரணம்

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுக.. மு.க. ஸ்டாலினுக்கு டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
TTV Dinakaran wishes doctors on Doctors Day

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுக.. மு.க. ஸ்டாலினுக்கு டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com