தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on: August 27, 2024 at 5:55 pm
தஞ்சாவூர் வன்கொடுமை : தஞ்சாவூர் அருகே இரண்டு வாரங்களுக்கு முன் நடந்து முடிந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், கடந்த 12ம் தேதியன்று நான்கு பேர் கைதான நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் — 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் அருகே இரு வாரங்களுக்கு முன் நண்பரின் நம்பிக்கையால் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டார். இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது, தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆக, தற்போதுவரை, மொத்தமாக ஆறு பேர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com