சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மாஞ்சோலை.. மொத்தம் எத்தனை வாக்காளர்கள் தெரியுமா?

Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மாஞ்சோலை தயாராகி வருகிறது; மலைப்பகுதியான இங்கு எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

Published on: March 22, 2026 at 11:35 am

திருநெல்வேலி மார்ச் 22, 2026; திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு பகுதி மாஞ்சோலை; இந்த அழகு கொஞ்சும் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. தற்போது இந்தப் பகுதியினர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். இங்கு மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன? என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் பேட்டியை பார்க்கலாம்.

மாவட்ட தேர்தல் அதிகாரியும் (DEO) மாவட்ட ஆட்சியருமான டாக்டர் ஆர். சுகுமார், சனிக்கிழமை (மார்ச் 21, 2026) மாஞ்சோலை தோட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகுமார், ஊத்து வாக்குச்சாவடியில் வெறும் ஆறு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்; இவர்கள் அனைவரும் முன்னாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். ‘நாலுமுக்கில் 28 வாக்காளர்கள் உள்ளனர், மீதமுள்ளவர்கள் மாஞ்சோலையில் வசிக்கின்றனர். யார் இன்னும் மலைப்பகுதியில் வசிக்கின்றனர், யார் சமவெளிக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை கவனமாகச் சரிபார்த்து வருகிறோம்,’ என்று தெரிவித்தார்.

இது, மஞ்சோலை மலைப்பகுதி வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி விவரங்கள் குறித்த விவரங்கள் ஆகும். அந்த வகையில் மாஞ்சோலையில் மொத்தம் 79 வாக்காளர்கள் உள்ளார்கள்; இதற்காக மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சிக்கல்.. மார்ச் 23 வேட்பு மனு நிறைவு!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா! Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com