Yograj Singh: தந்தை தெண்டுல்கரை போல் அவரது மகன் அர்ஜூன் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை என பிரபல யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
Yograj Singh: தந்தை தெண்டுல்கரை போல் அவரது மகன் அர்ஜூன் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை என பிரபல யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

Published on: January 2, 2026 at 4:49 pm
புதுடெல்லி, ஜன.2, 2025: இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்களில் யாருக்கும் இல்லாத அளவுக்கு அர்ஜுன் தெண்டுல்கர் மீது எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் அவர், சச்சின் தெண்டுல்கரின் மகன். அதனால், தனது தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்குவதற்கு அவர் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறார். தற்போது, அர்ஜுன் வேகப்பந்து வீச்சாளராக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.
அவரது பயணம், “பிரபலமான தந்தையின் மகன்” என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான வீரராக தன்னை நிரூபிக்க வேண்டிய கடினமான பாதையாக உள்ளது. மேலும், அர்ஜுன் தெண்டுல்கர், இடதுகை சீம் பந்து வீச்சாளர் (Left-arm seam bowler) என அறியப்படுகிறார். அவர் IPL-இல் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் கோவா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக் கான்.. துரோகி என விமர்சித்த பா.ஜ.க- காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
IPL 2026 சீசனுக்கு முன் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக அறியப்படும் யோக்ராஜ் சிங் அவர்கள், அர்ஜுன் தெண்டுல்கர் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் யூ-ட்யூப் சேனலில் பேசியபோது, அர்ஜுன் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு தன்னைச் சந்தித்ததாக கூறினார்.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் அர்ஜுன், தனது வலுவான பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். இதனால், அர்ஜுன் தெண்டுல்கர் ஒரு பல்துறை திறமையாளர் (all-rounder potential) எனும் சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார். மேலும், “நான் அர்ஜூன் தெண்டுல்கரை பார்த்தேன். அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடிகிறது. அப்படி இருக்க அவரை பேட்டிங் செய்ய அனுமதித்தீர்களா? என அவரது பயிற்சியாளரிடம் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும், அர்ஜூன் தெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் என ஆல் ரவுண்டர் என்றார்.
இதையும் படிங்க : மகளிர் ஹாக்கி.. வெற்றியை ருசித்த பெங்கால் டைகர்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com