Saaniya Chandhok: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் மனைவி சானியா சந்தோக் யார் தெரியுமா?
Saaniya Chandhok: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் மனைவி சானியா சந்தோக் யார் தெரியுமா?

Published on: March 6, 2026 at 2:17 pm
Updated on: March 6, 2026 at 2:18 pm
மும்பை, மார்ச் 6, 2026: புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன். இவர், தனது நீண்டகால துணைவி சானியா சந்தோக்கை மார்ச் 5, 2026 அன்று தென் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண விழாவில் மணந்தார். இந்தத் திருமணம் மிகுந்த பாதுகாப்புடன் 5-நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விளையாட்டு, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு உலகின் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் ஆகஸ்ட் 2025-இல் நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு முன், அம்பானி குடும்பம் ஜாம்நகரில் நடத்திய பெரிய பூஜை, மும்பையில் நடந்த மெஹந்தி-சங்கீதம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
யார் இந்த சானியா சந்தோக்?
சானியா சந்தோக் பொதுவாக ஊடகங்களில் அதிகம் தெரியாதவர். இவர், மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோரான பிரீமியம் செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் நலன்புரி நிறுவனத்தில் 2022 மே மாதம் முதல் பார்ட்னர் ஆக உள்ளார். மேலும் இவர், இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் (எல்.எஸ்.இ)-இல் 2020-இல் வணிக மேலாண்மை பட்டம் பெற்றார் ஆவார். விலங்குகளின் மீது உள்ள ஆர்வத்தால் விலங்குகள் தொடர்பான பாடத்தையும் இவர் படித்துள்ளார்.
குடும்ப பின்னணி
சானியா, சன்னி மற்றும் கௌரிகா கை சந்தோக்கின் மகள் ஆவார். இந்தக் குடும்பம் உணவு தொழிலுக்கு அப்பாற்பட்டு, இந்தக் குடும்பம் இந்தியாவின் விருந்தோம்பல் துறையில் முக்கிய பங்காற்றுகிறது; மும்பையில் உள்ள பல ஹோட்டல் பிராண்டுகளை நடத்துகிறது. மேலும், சானியா சந்தோக், வணிகம், கல்வி மற்றும் விலங்குகள் மீது கொண்டுள்ள ஆர்வம் ஆகியவற்றால் தனித்துவமான அடையாளம் பெற்றவர் ஆவார்.
இதையும் படிங்க : இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா.. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com