Tilak Varma: “பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்; நான் நிதானமாக நின்று ஆடினேன்” என இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மா கூறினார்.
Tilak Varma: “பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்; நான் நிதானமாக நின்று ஆடினேன்” என இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மா கூறினார்.
Published on: September 30, 2025 at 2:42 pm
ஹைதராபாத், செப்.30, 2025: ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியின் போது திலக் வர்மா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 69 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் முதலில் பாகிஸ்தான் வெல்வது போல் இருந்தது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி திணறியது.
திலக் வர்மா பேட்டி
VIDEO | Hyderabad: "They (Pakistani players) tried hard and were coming at us once we were three down, but for me it was important to remain calm and play well to win the match. After winning, I replied to them perfectly, and everyone had seen it, " says Indian batter Tilak… pic.twitter.com/h6FufpVrox
— Press Trust of India (@PTI_News) September 30, 2025
(நன்றி: பி.டி.ஐ)
ஆனால் அடுத்து வந்த திலக் வர்மா, நங்கூரம் பாய்த்தது போல் நின்று நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் அவர் இன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “முதலில் பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய திலக் வர்மா, “நாங்கள் 3 ரன்கள் எடுத்திருந்தபோது அவர்கள் (பாகிஸ்தான் வீரர்கள்) கடுமையாக முயற்சி செய்து எங்களைத் தாக்கத் தொடங்கினர். ஆனால் எனக்கு அமைதியாக இருந்து போட்டியில் வெற்றி பெற நன்றாக விளையாடுவது முக்கியம் என்ற எண்ணம் இருந்தது” என்றார்.
இதையடுத்து, “வெற்றி பெற்ற பிறகு, நான் அவர்களுக்கு சரியாக பதிலளித்தேன், எல்லோரும் அதைப் பார்த்தார்கள்” என்றார்.
இதையும் படிங்க : அதை சர்ச்சையாக பார்க்கவில்லை.. உண்மையான கோப்பை.. சூர்ய குமார் யாதவ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com