Ajit Agarkar: கருண் நாயரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அஜித் அகர்கர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்” என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Ajit Agarkar: கருண் நாயரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அஜித் அகர்கர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்” என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Published on: September 25, 2025 at 5:21 pm
புதுடெல்லி, செப்.25, 2025: கருண் நாயர் கிரிக்கெட்டில் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு இங்கிலாந்தில் ஒரு வாய்ப்பு (சரியாகச் சொன்னால் நான்கு) கிடைத்தது, ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை.
அதாவது தற்போது கருண் நாயரின் டெஸ்ட் வாழ்க்கை அமைதியாக முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து 33 வயதான கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் பெயர் டிக் செய்யப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் சொந்த மண்ணில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் இந்த முடிவை உறுதிப்படுத்தினார். இந்திய அணி நிர்வாகம், கருண் நாயரிடம் இருந்து அதிகம் எதிர்பார்த்ததாகக் கூறினார்.
மேலும், அவருக்கு 3 முதல் 6 வாய்ப்புகள் வரை கொடுக்கப்பட்டன” என்றார். இது குறித்து பேசிய அஜித் அகர்கர், “இங்கிலாந்தில் கருண் நாயரிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். அது ஒரு இன்னிங்ஸைப் பற்றியதாக இருக்க முடியாது” என்றார்.
மேலும், “தற்போது தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தது 15-20 வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம், ஆனால் ஒவ்வொரு முறையும் அது சாத்தியமில்லை” என்றார்.
யார் இந்த படிக்கல்?
படிக்கல் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்தார், இது அவரது அணிக்குத் திரும்புவதற்கு உந்துதலாக அமைந்தது.
“அதாவது, அவர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் அணியில் இருந்தார், இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் விளையாடினார்.
அங்கு 50 ரன்கள் எடுத்தார். எனவே, அவர் இந்தியாவுடன் நல்ல ஃபார்மைக் காட்டியுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 சிக்ஸர், 6 பவுண்டரி.. அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்.. 41 ரன்னில் இந்தியா வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com