Jwala Gutta: ஜூவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்தார். இதற்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Jwala Gutta: ஜூவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்தார். இதற்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Published on: September 15, 2025 at 3:52 pm
சென்னை, செப்.15, 2025: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் ஜூவாலா கட்டா, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பயனளிக்கும் ஒரு முயற்சியாக 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மகள் பிறந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தான முகாமில் தீவிரமாக பங்களித்து வருகிறார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியான ஜூவாலா, சமூக ஊடகங்களில் இந்தச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், குறைமாத மற்றும் மோசமான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
"Breast milk saves lives.For premature and sick babies, donor milk can be life changing. If you're able to donate, you could be a hero to a family in need. Learn more, share the word, and support milk banks! 💜 #BreastMilkDonation #DonateMilk #InfantHealth pic.twitter.com/qbMle3pgpR
— Gutta Jwala 💙 (@Guttajwala) August 17, 2025
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “”தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றுகிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு, தானம் செய்யப்பட்ட பால் வாழ்க்கையை மாற்றும். நீங்கள் தானம் செய்ய முடிந்தால், தேவைப்படும் குடும்பத்திற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜூவாலா இதுவரை 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி தாய்மார்கள் இல்லாத குழந்தைகளுக்கும், மருத்துவமனைகளில் உள்ள குறைப்பிரசவ அல்லது மோசமான நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த நான்கு மாதம் காலமாக அவர் தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நான் வந்துட்டேன்னு சொல்லு.. கம்பீர், அகர்கருக்கு செய்தி அனுப்பிய ரோகித் சர்மா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com