IND-W vs AUS-W 3rd ODI: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டிகளில் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் ஸ்மிருதி மந்தனா.
IND-W vs AUS-W 3rd ODI: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டிகளில் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் ஸ்மிருதி மந்தனா.
Published on: September 20, 2025 at 11:11 pm
புதுடெல்லி, செப்.20, 2025: புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் இரண்டாவது வேகமான மகளிர் ஒருநாள் சதத்தை அடித்தார்.இதன் மூலம், 2000-01 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டனின் (57 பந்துகளில்) சாதனையை மந்தனா முறியடித்தார்.
இதில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங், 2012-13 சீசனில் நியூசிலாந்திற்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்து, வேகமான சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29 வயதான மந்தனா 50 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து சதம் அடித்தார்.
இது இந்திய வீரரின் வேகமான சதமாகும். ஏனெனில் இடது கை வீராங்கனை 70 பந்துகளில் சதம் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.மேலும், 2024 ஆம் ஆண்டில் இந்த சாதனையை எட்டிய மந்தனா, ஒரே ஆண்டில் நான்கு ஒருநாள் சதங்களை அடித்த முதல் பெண் வீராங்கனை ஆவார்.இந்த சாதனையை அடைந்த மற்றொரு வீராங்கனை தென் ஆப்பிரிக்காவின் டாஸ்மின் பிரிட்ஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘புதுமையான சிந்தனையாளர்’.. சூர்ய குமாருக்கு சுனில் கவாஸ்கர் பாராட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com