Rohit Sharma Stand in Wankhede Stadium: ரோஹித் சர்மாவின் பெற்றோர் வெள்ளிக்கிழமை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் வீரரின் பெயரில் உள்ள ஸ்டாண்டைத் திறந்து வைத்தனர்.
Rohit Sharma Stand in Wankhede Stadium: ரோஹித் சர்மாவின் பெற்றோர் வெள்ளிக்கிழமை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் வீரரின் பெயரில் உள்ள ஸ்டாண்டைத் திறந்து வைத்தனர்.
Published on: May 17, 2025 at 2:34 pm
மும்பை, மே 17 2025: புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் ‘ரோஹித் சர்மா ஸ்டாண்ட்’ திறந்து வைக்கப்பட்டது. இதனை ரோகித் சர்மாவின் பெற்றோர் தந்தை குருநாத் சர்மா மற்றும் தாயார் பூர்ணிமா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் முன்னெடுத்து இருந்தது. இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தபோது 3 கிரிக்கெட் வீரர்களுக்கு கௌரவம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
𝐖𝐚𝐧𝐤𝐡𝐞𝐝𝐞 𝐧𝐨𝐰 𝐡𝐚𝐬 𝐢𝐭𝐬 𝐩𝐞𝐫𝐦𝐚𝐧𝐞𝐧𝐭 𝐑𝐎-𝐚𝐫 🫡
— IndianPremierLeague (@IPL) May 17, 2025
And the Hitman’s heartfelt speech made it all the more iconic 🫶
Presenting the 𝐑𝐨𝐡𝐢𝐭 𝐒𝐡𝐚𝐫𝐦𝐚 𝐒𝐭𝐚𝐧𝐝 🏟#TATAIPL | @ImRo45 pic.twitter.com/gc214gHiUB
இந்தப் பட்டியலில் மற்ற நபர்கள் முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர் மற்றும் முன்னாள் பி.சி.சி.ஐ தலைவர் சரத் பவார் ஆகியோர் ஆவார்கள். இந்த நிலையில், திவேச்சா பெவிலியனின் லெவல் த்ரீ இப்போது ரோஹித்தின் பெயரைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிராண்ட் ஸ்டாண்டின் லெவல் 3 மற்றும் 4 முறையே பவார் மற்றும் வடேகரை கௌரவிக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி; என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com