Rohit Sharma: அஜித் அகர்கர், கவுதம் கம்பீருக்கு ரோகித் சர்மா உரத்த மற்றும் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளார்.
Rohit Sharma: அஜித் அகர்கர், கவுதம் கம்பீருக்கு ரோகித் சர்மா உரத்த மற்றும் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளார்.
Published on: September 12, 2025 at 10:26 am
Updated on: September 12, 2025 at 10:47 am
புதுடெல்லி, செப்.12 2025: ஆஸ்திரேலிய நாட்டின் உலக புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமாக பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய ஒருநாள் கேப்டன் ரோகித் சர்மா தயாராகி வருகிறார். 38 வயதான அவர் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரோகித் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து பலத்த ஊகங்கள் உள்ளன. 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பிரபல இந்தி தினசரி நாளேடான டைனிக் ஜாக்ரன், “ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி ஒருநாள் தொடரை விளையாடக்கூடும்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், “தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் 2027 உலகக் கோப்பையில் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனவுகளைக் கொண்டிருந்தால், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுமாறு இருவரும் கேட்கப்படலாம்” என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை, ரோகித் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில், “நான் மீண்டும் இங்கே இருக்கிறேன். இது மிகவும் நன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கருக்கு செய்தி அனுப்பியதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம்; மனம் திறந்த பும்ரா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com