பாகிஸ்தான் தாக்குதலால் வேதனை: ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்

Rashid Khan: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதல் வேதனையளிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

Published on: March 17, 2026 at 3:12 pm

காபூல், மார்ச் 17 2026: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆப்கான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் “போர் குற்றம்” என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, ரமலான் மாதத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத செயலாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த கொடூரச் சம்பவம் குறித்து ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்றும் ரஷீத் கான் வலியுறுத்தினார்.

இந்த கடினமான நேரத்தில் நான் எனது ஆப்கானிஸ்தான் மக்களுடன் நிற்கிறேன். நாம் குணமடைவோம், ஒரு தேசமாக நாம் எழுச்சி பெறுவோம். நாம் எப்போதும் செய்வோம். இன்ஷா அல்லாஹ்! என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காபூல் மருத்துவமனை தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு: பாக். கடுமையாகச் சாடிய இந்தியா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com