மெல்போர்ன், ஜன.19, 2026: தனது நீண்டகால போட்டியாளரும் நண்பருமான ரோஜர் பெடரர் பாதையில், ரஃபேல் நடால் ஓய்வுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு திரும்பவுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பெடரர் “Battle of the World No.1s” எனும் இரட்டையர் போட்டியில் ஆஷ் பார்டி, ஆண்ட்ரே ஆகஸி, லெய்டன் ஹியூயிட், பாட் ராஃப்டர் ஆகியோருடன் கலந்து கொண்டார். இது 2020க்குப் பிறகு, புகழ்பெற்ற ராட் லாவர் அரங்கில் அவர் தோன்றிய முதல் நிகழ்வாகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நடால் மீண்டும் மெல்போர்ன் பார்க்-க்கு திரும்புகிறார். 2023இல் அவர் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்தார். மேலும், அவரது விளையாட்டு வாழ்க்கையை காயம் பாதித்தது.
இந்நிலையில், 2024இல் டேவிஸ் கப் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு அவர் ஓய்வு பெற்றார்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கருக்கு இடமில்லை.. மார்க் வாக் XI அணி.. சர்ச்சையும் விவாதமும்!
பெடரரைப் போல நடால் நட்புறவு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, ஆண்கள் ஒற்றையர் இறுதி நாளில் நடைபெறும் AO Night of Legends நிகழ்வில் கலந்து கொண்டு, தனது ஆஸ்திரேலிய ஓபன் பயண அனுபவங்களை பகிர்ந்து, தனது பாரம்பரியத்தை நினைவுகூரவுள்ளார். அவருடன் ஆஷ் பார்டி மற்றும் டிலன் ஆல்காட் இணைகிறார்கள்.
அதே சனிக்கிழமை, பெடரர் பார்டி மற்றும் ஆகஸி உடன் இணைந்து, ஹியூயிட் – ராஃப்டர் ஆஸ்திரேலிய ஜோடியை 2-4, 4-2, 4-2 என்ற கணக்கில் வென்றார். நிகழ்வில் நோவக் ஜோகோவிச் பார்வையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்.. சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரின்கா வெற்றி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்