T20 World Cup match: நாங்க விளையாட வர்ல.. அடம் பிடிக்கும் பாகிஸ்தான்!

T20 World Cup match: டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Published on: February 4, 2026 at 2:15 pm

இஸ்லாமாபாத், பிப்.4, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி-20 உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை (பிப்.3) இலங்கையில் தரையிறங்கியது. எனினும், அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான ‘குரூப் A’ போட்டியை புறக்கணிக்கலாம் என்ற குழப்பம் சூழ்ந்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் அரசு ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கமாட்டார்கள் என்று தெளிவுபடுத்தியது.
இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் அளிக்கவில்லை, ஏனெனில் சமூக ஊடகப் பதிவு அதிகாரப்பூர்வ அறிக்கையாக கருதப்படாது.

இதையும் படிங்க: 2027 உலக கோப்பையில் விராத், ரோகித்? வயதை விட முக்கியம் இதுதான்.. தோனி

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான் அரசின் முடிவை கேள்வி எழுப்பியதோடு, இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர்க்கத் தீர்மானித்தால் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக அவசரக் கூட்டம் நடத்தலாம் என்ற ஊடகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டும் இவ்விவகாரத்தில் அமைதியாகவே உள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சட்டப்பூர்வ மோதலுக்குத் தயாராகி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகின்றன. அதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிற உறுப்பினர் வாரியங்களிடம் ஆதரவு கோரியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், எந்த ஆதரவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பெற முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை வர்றோம்.. ஆனால் இந்தியாவுடன் ஆட மாட்டோம்.. பாகிஸ்தான்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com