Pakistani woman fan: பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் பேட்டி இணையத்தில் வைரலாகிவருகிறது.
Pakistani woman fan: பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் பேட்டி இணையத்தில் வைரலாகிவருகிறது.
Published on: September 29, 2025 at 2:02 pm
துபாய், செப்.29, 2025: ஆசிய கோப்பை 2025-ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. பரம எதிரிகளான இரு அணிகள், இறுதிப் போட்டியில் விளையாடியது பெரும் எதிர்ப்பார்வை ஏற்படுத்தியது. எனினும், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்தத் தோல்வி குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் ரசிகை ஒருவர் பேட்டியளித்தார்.
பாகிஸ்தான் ரசிகை பேட்டி
#WATCH | Dubai, UAE | India wins the #asiacup2025 by defeating Pakistan.
— ANI (@ANI) September 28, 2025
A Pakistani fan says, "…Pakistan did not win the match again, but the match was very entertaining…We will come again next time with the hope of winning the match. 'Mauka hi Mauka'" pic.twitter.com/vz807Jcllk
(நன்றி ஏ.என்.ஐ)
அப்போது அவர், “பாகிஸ்தான் மீண்டும் போட்டியில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்த முறை போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் நாங்கள் மீண்டும் வருவோம்” என்றார்.
பாகிஸ்தான் ரசிகையின் இந்தப் பேட்டி தற்போது வைரலாகிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப் போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா 69 ரன்கள் குவித்து வெற்றியை தேடிவந்தார். இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா.. ஆடுகளத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com