Mohammad Amir: “சஞ்சு சாம்சன் ஏன் நல்ல ஆட்டம் காட்டுகிறார்? அபிஷேக் சர்மா தொடர்ந்து தோல்வியடைகிறார்” என்று முகம்மது அமீர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Mohammad Amir: “சஞ்சு சாம்சன் ஏன் நல்ல ஆட்டம் காட்டுகிறார்? அபிஷேக் சர்மா தொடர்ந்து தோல்வியடைகிறார்” என்று முகம்மது அமீர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: March 6, 2026 at 3:32 pm
இஸ்லாமாபாத், மார்ச் 6, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமமது அமீர், “இந்திய கிரிக்கெட்டர் அபிஷேக் சர்மாவை தொடரின் தொடக்கத்திலிருந்தே விமர்சித்து வருகிறார்.
அதாவது அவர் அபிஷேக்கை “சுணக்கமானவர்” என்று கூட குறிப்பிட்டிருந்தார். வியாழக்கிழமை நடந்த போட்டியில் அபிஷேக் மீண்டும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமீர் தனது விமர்சனத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
இது குறித்து முகம்மது அமீர், “இருதரப்பு தொடருக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் தொடர் நிகழ்வுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. பொதுவாக சாதாரண தொடரில் அணிகள் அதிக கவனம் செலுத்தாமல், புதிய வீரர்களை முயற்சி செய்வதற்காக விளையாடுகின்றன.
ஆனால், சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் நிகழ்வுகளில், ஒவ்வொரு அணியும் எதிர்கொள்ளும் வீரர்களை தீவிரமாக ஆய்வு செய்கின்றன. இப்போது அனைவரும் அபிஷேக் சர்மாவின் பலம் எது, பலவீனம் எது என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
அவர் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்கிக் கொள்கிறார், வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது உடலை குறிவைத்து பந்துவீசும்போது அவர் போராடுகிறார். எனவே, சர்வதேச கிரிக்கெட்டில், குறிப்பாக பெரிய நிகழ்வுகளில் விளையாட, தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை முகம்மது அமீர் ஜியோ நியூஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா.. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com