Manjrekar Warns SKY: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சூர்யகுமார் யாதவின் ‘அபாயகரமான யுக்தி’ குறித்து எச்சரிக்கை விடுத்து, ‘கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
Manjrekar Warns SKY: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சூர்யகுமார் யாதவின் ‘அபாயகரமான யுக்தி’ குறித்து எச்சரிக்கை விடுத்து, ‘கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

Published on: March 2, 2026 at 12:44 pm
புதுடெல்லி, மார்ச் 2, 2026: பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் சஞ்சு மஞ்ரேக்கர், “சூர்யகுமார் யாதவிடம் ‘ஆங்கர்’ பாணியில் விளையாடுவதை நிறுத்தி, முதல் பந்திலிருந்தே ஆட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். மேலும், சூர்யகுமார் யாதவின் ‘அபாயகரமான யுக்தி’ குறித்து எச்சரிக்கை விடுத்து, ‘கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி டி-20 கேப்டன் சூர்ய குமார் யாதவ், கடந்த ஆண்டு T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் 2026-ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக அவர் அதிர்ஷ்டத்தை முற்றிலும் மாற்றியுள்ளார்.
வலதுகை பேட்ஸ்மேனான அவர் அபாரமான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து அவரது பொற்காலம் தொடங்கியது. 35 வயதான அவர், T20 உலகக் கோப்பை 2026-ஐ சிறப்பாக தொடங்கி, வான்கடே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக 84 ரன்கள் (அவுட் ஆகாமல்) அடித்து, அணியை சிக்கலில் இருந்து மீட்டார்.
20 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், சூர்யகுமார் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து தன்னை மாற்றிக் கொண்டு விளையாடி வருகிறார்; தேவையான சமயங்களில் எச்சரிக்கையுடன் அணுகுகிறார்.
எனினும், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் தங்கள் விருப்பப்படி மெதுவாக ஆட்டத்தை தொடங்குவதை விரும்பவில்லை. T20 வடிவில் ‘ஆங்கர்’ பாணியில் விளையாட விரும்பும் பேட்ஸ்மேன்களுக்கு இனி இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வீடியோ
இது குறித்து, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில் சூர்ய குமார் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், “சூர்யகுமார் யாதவ் குறித்து நான் அதிகம் விரும்பாத ஒரு விஷயம் இருக்கிறது. வான்கடே மைதானத்தில் இந்தியா 77/6 என்ற நிலைக்கு அமெரிக்காவுக்கு எதிராக சிக்கலில் இருந்தபோது, சூர்யகுமார் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடினார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிறிது மெதுவாக விளையாடி, பின்னர் ஆக்ரோஷம் காட்டினார். அப்போது அவர் சிறந்த ரன்கள் எடுத்தார், ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதும் பெற்றார். ஆனால் அதன் பிறகு, அவர் அதை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியா சில விக்கெட்டுகளை இழந்தபோது, அவர் ஆட்டத்தை மிகவும் மெதுவாக ஆடினார். இது சரியில்லை. கவனமாக ஆட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாக்குதலால் அசாதாரண சூழல் : பி.வி. சிந்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com