NBA champions: என்.பி.ஏ வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார் லெப்ரான் ஜேம்ஸ்.
NBA champions: என்.பி.ஏ வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார் லெப்ரான் ஜேம்ஸ்.

Published on: March 23, 2026 at 12:42 pm
புதுடெல்லி, மார்ச் 23, 2026: லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி ஆர்லாண்டோ மேஜிக் அணியை எதிர்கொண்ட போட்டியில், லெப்ரான் ஜேம்ஸ் தனது 1,612வது ரெகுலர் சீசன் ஆட்டத்தில் களமிறங்கினார்.
இதன்மூலம், என்.பி.ஏ (NBA) வரலாற்றில் அதிகபட்ச ரெகுலர் சீசன் ஆட்டங்களில் விளையாடிய வீரராக சாதனை படைத்தார்.
இதற்கு முன், 1997-இல் ஓய்வு பெற்ற ராபர்ட் பாரிஷ் 1,611 ஆட்டங்களுடன் சாதனையை வைத்திருந்தார். முன்னதாக, 41 வயதான ஜேம்ஸ், வியாழக்கிழமை மையாமி ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் டிரிபிள்-டபிள் பதிவு செய்து, பாரிஷின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில், என்.பி.ஏ தனது 23வது சீசனில் விளையாடி வருகிறார். இது முன்னெப்போதும் இல்லாத சாதனை ஆகும். மேலும், என்.பி.ஏ வரலாற்றில் அதிக புள்ளிகள், அதிக ஃபீல்டு கோல்கள், அதிக ஃபீல்டு கோல் முயற்சிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்துள்ளார். இது மட்டுமின்றி, தொடர்ந்து 1,297 ஆட்டங்களில் குறைந்தது 10 புள்ளிகள் எடுத்த சாதனை படைத்துள்ளார்.
மொத்த ஆட்டங்கள்
இதையும் படிங்க: ₹1.1 கோடிக்கு ஏலம்.. இளம் வயதில் சூர்யவன்ஷி சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com