Koneru Humpy : இந்தியாவின் முன்னணி சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, சைப்ரஸில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகினார்.
Koneru Humpy : இந்தியாவின் முன்னணி சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, சைப்ரஸில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகினார்.

Published on: March 24, 2026 at 4:51 pm
ஹைதராபாத் மார்ச் 24, 2026; இந்தியாவின் முன்னணி சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, சைப்ரஸில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகினார். இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு அச்சங்கள் குறித்து பேசி இருந்தார். மேலும் பயணம் செய்ய உகந்த இடமாக அது இல்லை என மற்ற நாடுகள் குறிப்பிட்டு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய கோனேரு ஹம்பி, “போர்க்கப்பல்கள் சூழ்ந்த சூழலில் ஒருவர் அமைதியாக விளையாட முடியாது.” என்றார். இது தொடர்பாக மேலும் பேசிய ஹம்பி, “போர்க்கப்பல்கள் சூழ்ந்த தீவில் ஒருவர் அமைதியாக விளையாட முடியாது. நான் வெளிநாட்டவர், அதுவும் ஒரு பெண். இத்தகைய முக்கியமான போட்டிக்காக பயணம் செய்ய வேண்டியிருந்தால், நான் எப்படி அமைதியாக விளையாட முடியும்? என்றார்.
தொடர்ந்து, “இத்தகைய முடிவுகள் வெறும் ஏற்பாடுகள் மட்டுமல்ல, வீரர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வெளியுறவு துறைகள் வெளியிட்ட Level 3 Travel Advisory-யில், சைப்ரஸில் நிலவும் பதற்றம் மற்றும் சமீபத்திய ட்ரோன் தாக்குதலைக் காரணமாக, பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், உலகத் தரமான போட்டி நடத்தும் இடமாக சைப்ரஸ் இருக்க முடியாது என்று நான் உணர்கிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், சதுரங்க உலகில் பாதுகாப்பு மற்றும் போட்டி நடத்தும் இடத் தேர்வு குறித்த விவாதங்களை தீவிரப்படுத்துகின்றன. ஹம்பியின் நிலைப்பாடு, விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் – ICC விருது வென்ற அருந்ததி ரெட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com