IPL 2026 auction: நடிகர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸ் ரஹ்மானை ₹9.20 கோடி மதிப்பில் வாங்கியுள்ளது.
IPL 2026 auction: நடிகர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸ் ரஹ்மானை ₹9.20 கோடி மதிப்பில் வாங்கியுள்ளது.

Published on: January 2, 2026 at 4:16 pm
Updated on: January 2, 2026 at 4:36 pm
புதுடெல்லி, ஜன.2, 2025: நடிகர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸ் ரஹ்மானை ₹9.20 கோடி மதிப்பில் வாங்கியுள்ளது. இந்தியா– வங்கதேச உறவுகள் பதற்றமாக இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் கடும் எதிர்ப்பை தூண்டியுள்ளது. குறிப்பாக, வங்கதேசத்தில் ஒரு இந்து நபர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் நிருபம், “நடிகர் ஷாருக் கான் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸ் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ““இது உங்களுக்கே நல்லது, மேலும் இந்தியாவின் நலனையும் காக்கும்.” என்றார்.
#WATCH | Mumbai: On KKR selecting a Bangladeshi player in the IPL auction, Shiv Sena leader Sanjay Nirupam says, "…When the entire country is enraged and angry at Bangladesh, anyone in India who has even the slightest connection to Bangladeshis could become a target of that… pic.twitter.com/3HWYMWqklg
— ANI (@ANI) January 2, 2026
தொடர்ந்து, “முழு நாடும் வங்கதேசம் மீது கோபமாக இருக்கும் நிலையில், அந்நாட்டு வீரர்களுடன் தொடர்புடைய எவரும் அந்தக் கோபத்தின் இலக்காக மாறக்கூடும்.” எனவும் எச்சரித்துள்ளார்.
ஷாருக்கானுக்கு காங்கிரஸ் ஆதரவு
இந்நிலையில், பா.ஜ.க மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், “ஷாருக் கானை பார்த்து துரோகி எனக் கூறுவது இந்தியாவின் பன்முகத்தன்மை (Pluralism) மீதான தாக்குதல்” என்றார்.
இதையும் படிங்க : தேசிய ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள்.. பெங்களூருவில் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com