Junior National Kho Kho Championship: 44ஆவது ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை (டிச.31, 2025) பெங்களூருவில் குஞ்ஜூரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கின.
Junior National Kho Kho Championship: 44ஆவது ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை (டிச.31, 2025) பெங்களூருவில் குஞ்ஜூரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கின.

Published on: January 1, 2026 at 6:18 pm
பெங்ளூரு, ஜன.1, 2026: 44ஆவது ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று (புதன்கிழமை) பெங்களூருவில் குஞ்ஜூரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கின.
இதில், இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 1,000 இளம் வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.
தொடக்க நாளில் சுமார் 40 போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையிலும் நடைபெற்றன. இந்நிலையில், அரையிறுதி போட்டிகள் ஜனவரி 3-ஆம் தேதி, இறுதி போட்டி ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்.
இந்தப் போட்டிகளை முன்னாள் அமைச்சர் ஹெச். நாகேஷ் தொடக்க விழாவை நடத்தினார். இதில், கோ-கோ சம்மேளனத்தின் (KKFI) மற்றும் கர்நாடக மாநில கோ-கோ சங்கத்தின் (KSKKA) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் பேசிய KKFI தலைவர் சுதன்ஷு மித்தல், “இளம் வீரர்களுக்கு கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்கும் தேசிய அளவிலான மேடையை வழங்குகிறது” என்றார்.
இந்த நிலையில், 58ஆவது சீனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் காஸிபேட்டில் ஜனவரி 11 முதல் 15 வரை நடைபெறுகின்றன.
இதையடுத்து, 35ஆவது சப்-ஜூனியர் தேசிய போட்டிகள் ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ராவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் ஹாக்கி.. வெற்றியை ருசித்த பெங்கால் டைகர்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com