PV Sindhu: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில், பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
PV Sindhu: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில், பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Published on: January 22, 2026 at 6:17 pm
புதுடெல்லி, ஜன.22, 2026: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் இந்திய வீரர் லக்ஷ்யா சேன் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர்கள் பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சேன் வியாழக்கிழமை இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் முன்-காலிறுதியில், லக்ஷ்யா சேன் ஹாங்காங்-சீனாவின் ஜேசன் குனாவனை 21-10, 21-11 என்ற கணக்கில் வெற்றி கொண்டார். பெண்கள் ஒற்றையர் முன்-காலிறுதியில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் க்யார்ஃபெல்ட்டை 21-19, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அடுத்த சுற்றில், சிந்து போட்டியின் முதலிடம் பெற்ற வீராங்கனை மற்றும் உலக நான்காவது இடத்தில் உள்ள சீனாவின் சென் யூ ஃபெயை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்.. யார் இந்த அமீலியா வால்வெர்டே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com