Suryakumar Yadav: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது குறித்து பேசியுள்ளார் இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ்.
Suryakumar Yadav: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது குறித்து பேசியுள்ளார் இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ்.
Published on: September 29, 2025 at 7:33 pm
துபாய், செப்.29, 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் செப்.28,2025 ஞாயிற்றுக்கிழமை மோதின.இதில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 69 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது.இது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், “அதனை நான் சர்ச்சை என்று சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ்.
சூர்ய குமார் யாதவ் பேட்டி
(நன்றி: ஏ.என்.ஐ)#WATCH | Dubai, UAE: On India refused to accept the Asia Cup 2025 trophy from ACC chairman Mohsin Naqvi, Indian skipper Suryakumar Yadav says, "I won't call it controversy. If you have seen, people have posted photos of trophy here and there. But the real trophy is when you win… pic.twitter.com/v33vIktcdr
— ANI (@ANI) September 29, 2025
இது குறித்து துபாயில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும், “நான் அதை சர்ச்சை என்று சொல்ல மாட்டேன். நீங்கள் பார்த்திருந்தால், மக்கள் கோப்பையின் புகைப்படங்களை இங்கேயும் அங்கேயும் பதிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையான கோப்பை என்பது மக்களின் இதயங்களை வெல்வது, வீரர்கள், அவர்களிடம் சம்பாதிக்கும் நம்பிக்கைதான்” என்றார். தொடர்ந்து, “உண்மையான கோப்பை என்பது களத்தில் உள்ள பலரின் உழைப்பும் முயற்சியும் ஆகும்” என்றார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா.. ஆடுகளத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com