4 நாட்களில் 350 கிலோமீட்டர் ஓட்டம்; இந்தியாவின் கடினமான மனிதர்.. யார் இந்த சுகந்த் சிங்க் சுகி?

Suganth Singh Suki: உலக அளவில் மூன்று 200 மைல் அல்ட்ராமாரத்தான் போட்டிகளை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மும்பையை சேர்ந்த ஸுகாந்த் சிங்.

Published on: April 27, 2025 at 11:41 am

மும்பை, ஏப். 27 2025: இந்தியாவின் கடினமான மனிதர் என்ற பெயர் பெற்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த 39 வயது நபரான சுகந்த் சிங்க் (சுகி). இவர் உலகளவில் மூன்று 200 மைல் அல்ட்ராமாரத்தான் போட்டிகளை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அதிக ஆபத்துகளுடன் கூடிய இந்த ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவது எளிதான ஒன்றல்ல. 2025 ஏப்ரல் 9-13 வரை நடைபெற்ற “டெலீரியஸ் வெஸ்ட்” அல்ட்ராமாரத்தான் போட்டியில் 321 கிலோமீட்டரை 94 மணி நேரத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

கடுமையான நிலப்பரப்புகள், தூக்கத்திற்கு எதிரான போராட்டம், பாம்புகள் மற்றும் காங்கரூக்களை தாண்டி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். போட்டியில் கலந்துகொண்ட 61 பேரில் பாதிக்கும் குறைவானோர் மட்டுமே போட்டியை முடித்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்தியக் கொடியை பறக்கவிட்டு பெருமை சேர்த்துள்ளார் சுகி. இந்த ஓட்டத்தில் பெரும் ஆபத்துகளும் இருந்ததாக அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டில் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட சுகி, ஓட்டப்பந்தயத்தை தனது மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக எடுத்துக் கொண்டார். இதுகுறித்து தெரிவித்துள்ள சுகி, எனக்கு ADHD இருப்பது கண்டறியப்பட்டது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கான மருந்துகள் உதவவில்லை, அப்போதுதான் நான் ஓடத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதரவு அளித்தவர்களில் ஒன்று நடிகர் ஜான் ஆபிரகாம். ஜான் ஆபிராஹாம் எனும் பெரிய நபர் என்னை நேரில் சந்தித்து ஆதரிக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருந்தது. அவருடைய ஆதரவு தனக்கு பெரிதும் உதவியதாக குறிப்பிட்டுள்ளார் சுகி.

எல்லோரும் போலவே, சிறியதாகத் தொடங்கிய சுகி, 2010-11 முதல் 10 கி.மீ மற்றும் 20 கி.மீ ஓட்டங்களுக்குப் பழக்கிக் கொண்டார். படிப்படியாக அதை முழு மராத்தானாக உயர்த்தினார். பின்னர், அந்த மராத்தான்கள் 100, 200 மற்றும் 300 கி.மீ ஓட்டங்களாக மாறியது. தற்போது சாதனையாக உருவாகி உள்ளது.

தனிப்பட்ட வீரர்களின் சவால்கள் மற்றும் வெற்றிகளை வெளிச்சம்போட்டுக்காட்டும் ஆவணப்படங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பமாக தெரிவித்துள்ளார். ஒருநாள், தன்னைப் போன்ற பலர் உடல் மற்றும் மனதின் எல்லைகளை கடந்து சாதனை படைப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கங்குலி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com