174 மில்லியன் டாலர் சேமிப்பு.. இந்தியாவுடன் விளையாடுகிறோம்.. பாகிஸ்தான் பராக் பராக்!

2026 T20 World Cup; டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.

Published on: February 10, 2026 at 4:23 pm

கொழும்பு பிப்ரவரி 10, 2026; இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை காரணமாக காட்டி, வங்கதேச கிரிக்கெட் அணி இந்திய மைதானங்களில் கிரிக்கெட் ஆட மறுத்தது. தங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட முடியாது என்றும் வங்கதேச கிரிக்கெட் அணி தெரிவித்திருந்தது.

மேலும் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் இது தொடர்பாக கோரிக்கையும் எடுக்கப்பட்டது; இந்தக் கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் அணிக்கு இந்தியாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை; வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் இந்திய மைதானங்களில் தாராளமாக கிரிக்கெட் ஆடலாம் என தெரிவித்தது. எனினும் வங்கதேச கிரிக்கெட் அணி தொடர்ந்து முரண்டு பிடித்து வந்தது.

இதையும் படிங்க; எஸ்.ஏ.எஃப்.எஃப் U-19 மகளிர் கால்பந்து உலக கோப்பை.. இந்தியா 4–0 வெற்றி

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆடாது என தெரிவிக்கப்பட்டது; எனினும் இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இடம் இருந்து வெளியாகவில்லை. மாறாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தரப்பில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்ற செய்தி பரவிய நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அல்லது முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வித நடவடிக்கையில் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையின் கொழும்புவில் இந்தியா பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி ரத்தாகவில்லை என்ற செய்திகள் வெளியாகின.

அதாவது கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மைதான தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன; இதனால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் வலுக்கவில்லை; மாறாக போட்டி நடைபெறும் அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்மதம்

இந்த நிலையில் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, T20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால், ICCக்கு 174 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசு தனது அணியை இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என்ற முன் தீர்மானத்தை மாற்றிய சில நிமிடங்களுக்குப் பிறகு, மும்பை–கொழும்பு–மும்பை சுற்றுப்பயண விமானக் கட்டணம் ரூ.10,000 உயர்ந்து ரூ.60,000 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; அபுதாபி மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகள்.. யார் யார் பங்கேற்கலாம்? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com