India Australia 1st T20: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளின் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
India Australia 1st T20: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளின் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

Published on: October 29, 2025 at 2:49 pm
Updated on: October 29, 2025 at 6:15 pm
ஓவல், அக்.29, 2025: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி, மனுகா ஒவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங்ககை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்ஸன், ஷிவம் துபே, அக்ஸர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் உள்ளார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஸ் பிலிப், சேவியர் பார்லட், நாதன் எல்லிஸ், மேத்தீவ் குனர்மான், ஜோஸ் ஹசில்வுட் உள்ளிட்டோர் உள்ளனர்.
போட்டி நிறுத்தம்இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தப் போட்டி மழை காரணமாக 18 ஓலர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.இதையும் படிங்க
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஜென்மபூமி, இந்தியா மாத்ருபூமி.. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com