இந்தியாவை ஒலிம்பிக் அழைத்துச் சென்ற ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் மரணம்.. யார் இவர்? முழு விவரம்!

Michael Nobbs Passes Away: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வீரர் மைக்கேல் நாப்ஸ் 72 வயதில் காலமானார்.

Published on: January 30, 2026 at 2:24 pm

புதுடெல்லி, ஜன.30, 2025; முன்னாள் இந்திய ஹாக்கி பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வீரர் மைக்கேல் நாப்ஸ் 72 வயதில் காலமானார். மைக்கேல் நாப்ஸ் 2011 முதல் 2013 வரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

அவரது தலைமையில் இந்தியா 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், தனது விளையாட்டு வாழ்க்கையிலும், பயிற்சியாளராகவும் ஹாக்கி உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார்.

இந்திய ஹாக்கி ரசிகர்களிடையே அவர் நினைவுகூரப்படும் பெயராக உள்ளார். மேலும், மைக்கேல் நாப்ஸ் 1979 முதல் 1985 வரை ஆஸ்திரேலியாவுக்காக 76 சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.
1981 மும்பை ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெறாத நிலையில், 2011ல் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், இந்தியாவைத் தவிர, ஜப்பான் ஹாக்கி அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது மரணம், ஹாக்கி உலகில் ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், இது இது இந்திய ஹாக்கி உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு எலும்பு காயம்? 2026 டி-20 உலக கோப்பையில் ஆடுவாரா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com