மகளிர் ஹாக்கி.. உருகுவேயை துரத்திய இந்திய அணி!

FIH Women’s Hockey World Cup 2026: எஃப்.ஐ.ஹச் (FIH) மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026 தகுதிச்சுற்றை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது.

Published on: March 9, 2026 at 1:40 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: எஃப்.ஐ.ஹெச் (FIH) மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026 தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி உருகுவே-யை 4-0 என்ற வெற்றி கணக்கில் வீழ்த்தியது. எஃப்.ஐ.ஹெச் (FIH) மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026 தகுதிச்சுற்றில், இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று (திங்கள்கிழமை) ஹைதராபாத்தில் நடைபெறும் பி குழுவின் இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்கும். நேற்று, சலிமா டீட்டே தலைமையிலான இந்திய அணி, உருகுவேவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி தகுதிச்சுற்றை வலுவாக தொடங்கியது. 21வது நிமிடத்தில் சுனேலிதா டாப்போ முதல் கோலை அடித்தார். 40வது நிமிடத்தில் இஷிகா முன்னிலை இரட்டிப்பித்தார். 49வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி மூன்றாவது கோலை அடித்தார். 58வது நிமிடத்தில் ருதுஜா தாதாசோ பிசால் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஹைதராபாத் போட்டி, சாண்டியாகோ (சிலி) நகரில் நடைபெறும் மற்றொரு தகுதிச்சுற்றுடன் சேர்ந்து, மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இரண்டு தகுதிச்சுற்றுகளில் ஒன்றாகும். ஹைதராபாத் மற்றும் சாண்டியாகோவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக 2026 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். இந்த உலகக் கோப்பை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com