West Asia Conflict Halts F1 Grands Prix: ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.
March 16, 2026
West Asia Conflict Halts F1 Grands Prix: ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.

Published on: March 16, 2026 at 1:51 pm
துபாய், மார்ச் 16, 2026: பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்தன. இந்தப் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.
ஃபார்முலா 1, ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரின் காரணமாக நடைபெறாது என்று அறிவித்துள்ளது. லிபர்டி மீடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு நிர்வாக அமைப்பான எஃப்.ஐ.ஏ (FIA) வெளியிட்ட அறிக்கையில், இந்தப் போட்டிகள் அடுத்த மாத காலண்டரில் மாற்றுப் போட்டிகளால் நிரப்பப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நமன் விருதுகள் 2026.. ராகுல் முதல் ஸ்மிருதி மந்தனா வரை.. யார் யாருக்கு கௌரவம்? முழு விவரம்!
மேலும், மாற்று வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டாலும், ஏப்ரல் மாதத்தில் மாற்றுப் போட்டிகள் நடத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் போட்டிகள் ஏப்ரல் 12 அன்று பஹ்ரைனிலும், ஏப்ரல் 19 அன்று சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரிலும் போட்டிகள் நடைபெறவிருந்தன.
இது குறித்து, எஃப்.1 தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்டெஃபானோ டொமெனிகாலி, “இது கடினமான முடிவு என்றாலும், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமையை கருத்தில் கொண்டு, சரியான முடிவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக கோப்பை ஹாக்கி.. இந்திய மகளிர் அணி தகுதி!
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.45 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.
Oil Surges to $105 Amid US-Israel War: அமெரிக்கா- ஈரானுக்கு எதிரான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை $105.15 ஆக உயர்ந்துள்ளது.
Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com